கைகளில் உள்ள கருமையை கூட மாயமாக்கும் உணவுப் பொருட்கள்: இவ்வளவு இருக்கா?

OruvanOruvan

How to Remove Dark Spots on Hands

கைகளில் கருப்பாக இருக்கும் இடங்களை வெள்ளையாக்க இயற்கை உணவு பொருட்கள் உதவி புரியும்.

கைகளில் உள்ள கருமையை நீக்க எந்த உணவு பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

தயிர்

தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.

OruvanOruvan

Yogurt

தக்காளி

தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

OruvanOruvan

Tomato

பாதாம்

பாதாமை இரவில் படுக்கும்போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

OruvanOruvan

Almond

பப்பாளி

பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே, பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

OruvanOruvan

Papaya

கற்றாழை

ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

OruvanOruvan

Aloe Vera