பொங்கல் ஸ்பெஷல்: சிம்பிளாக ரவை பொங்கல் செய்யலாம்

OruvanOruvan

Rava Pongal

பொங்கல் பண்டிகையன்று எல்லா வீடுகளிலும் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், சிறுதானியப் பொங்கல், கற்கண்டு பொங்கல், உப்பு பொங்கல் என விதவிதமாக பொங்கல் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் பொங்கல் செய்யத் தெரியாதவர்களுக்கு ஈசியான முறையில் செய்யும் ரவை பொங்கல்.

பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்திருக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த ரவை பொங்கல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்

பாசிப்பருப்பு - அரை கப்

முந்திரி - 15

சீரகம் - கால் ஸ்பூன்

மிளகு - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிதளவு

நெய் - 4 ஸ்பூன்

செய்முறை

குக்கரில் தண்ணீர் குறைவாக வைத்து, பாசிப்பருப்பை மூன்று விசில் வைத்து குழைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் ரவையை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, ஒரு வாணலியில் நெய் சேர்த்து அதில் சீரகம், மிளகு சேர்த்து பொரிய விடுங்கள். அத்தோடு அதில் கறிவேப்பிலையும் சேர்த்து பொரிய விடுங்கள்.

அதில் வறுத்த ரவையையும் சேர்த்து நெய்யோடு சேர்த்து வதக்குங்கள். பிறகு அதில் கொதிக்க வைத்த நீரை 2 கப் அளவு சேர்த்து கொதிக்க விடுங்கள்.

நன்கு கொதிக்கும்போது அதில் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு வேகவைத்த பருப்பையும் சேர்த்து கிளற வேண்டும். ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பொங்கலாக சேர்ந்து, ரவை வேகும் வரை கிளறி விடுங்கள்.

பருப்பும் ரவையும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கலந்தால் ரவை பொங்கல் ரெடி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ரவை பொங்கலை விரும்பி சாப்பிடுவார்கள்.