கிராமத்து ஸ்டைலில் சுவையான சிக்கன் ப்ரை!: பிறகு ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

OruvanOruvan

Village Style Chicken Fry Recipe

வீட்டிலேயே கிராமத்து ஸ்டைலில் சுவையான சிக்கன் ப்ரை செய்து ருசிக்கலாம்.

கிராமத்து ஸ்டைல் சிக்கன் ப்ரைக்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி

மைதா - 4 தேக்கரண்டி

அரிசி மாவு - 4 தேக்கரண்டி

சிவப்பு நிற கேசரி பவுடர் - தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

OruvanOruvan

Village Style Chicken Fry Recipe

அரைப்பதற்கு..

  1. பூண்டு - 10 பல்

  2. இஞ்சி - 2 இன்ச்

  3. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

முதலில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சிக்கனை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் கழுவிய சிக்கனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகத் தூள், எலுமிச்சை சாறு, மைதா, அரிசி மாவு, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி, 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான சிக்கன் ப்ரை தயார்.