கொலஸ்ட்ரால்,புற்றுநோய்க்கு மருந்தாகும் சர்க்கரை வள்ளி கிழங்கு: பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கரு உருவாக்குதல் எளிமையாகிறது

OruvanOruvan

Sweet potato

சர்க்கரைவள்ளி கிழங்கில் அனைத்து வகையான காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

சர்க்கரைவள்ளி கிழங்கில் விட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் இருப்பதாகவும் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவை உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் தன்மை உடையது சர்க்கரைவள்ளி கிழங்கு.

பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கரு உருவாக்குதல் எளிமையாகிறது.

மேலும் அல்சர் ஏற்படாமல் இருக்கவும் அல்சர் வந்தால் குணமாகவும் சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாம்.

புற்றுநோய் ஏற்படாமல் இருக்க சக்கரைவள்ளி கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

OruvanOruvan

Sweet potato

புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாப்பு

சர்க்கரை வள்ளி கிழங்கில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடண்டுகள் கேன்சர் எதிர்ப்பு கூறுகளாகவும் செயல்படுகிறது.

குறிப்பாக பர்பிள் சர்க்கரை வள்ளி கிழங்கில் காணப்படும் அந்தோசயனின் என்று சொல்லக்கூடிய ஆன்டிஆக்ஸிடண்டுகள் சிறுநீர்ப்பை, குடல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை மந்தப்படுத்துதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.