15 நிமிடத்தில் சுவையான அதிரடி சாம்பார்! வீடே மணக்க மணக்க ருசிக்கலாம்: இந்த கலவையில் இப்போது 2 கோப்பை தண்ணீர் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

OruvanOruvan

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார்.

எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம்.

அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள சாம்பாரை வெறும் பதினைந்தே நிமிடங்களில் எப்படி சுவையாகச் செய்வது என்பதைப் பார்ப்போம்.

OruvanOruvan

Sambar Recipe

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு – 1/2 கோப்பை

  • வெங்காயம் – 1

  • சின்ன வெங்காயம் – 2

  • தக்காளி – 2

  • பூண்டு – 3 பற்கள்

  • சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி

  • உப்பு – 2 தேக்கரண்டி

  • பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி

  • கருவேப்பிலை – சிறிதளவு

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

  • கடுகு – 1/2 தேக்கரண்டி

  • எண்ணெய் – 1 தேக்கரண்டி

  • முருங்கைக்காய் அல்லது உங்களுக்கு விருப்பமுள்ள காய்கறிகள் – தேவையான அளவு

OruvanOruvan

Sambar Recipe

செய்முறை

குக்கரில் துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் போட்டு அதில் 1 1/2 கோப்பை தண்ணீர் ஊற்றி, 5 முதல் 6 விசில் வரை விட்டு முதலில் இந்தக் கலவையை நன்கு வேகவையுங்கள்.

பருப்பு வேகும் அதே நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையில் இப்போது 2 கோப்பை தண்ணீர் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பருப்பு வேகவைத்த பிறகு, அதனை நன்கு மசித்து, அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு அதனோடு வதக்கிய காய்கறி கலவையை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீரையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, அடுப்பை அணைக்கவும். சுவையான சாம்பார் தாயார்.