மீதமான பொரியில் பஞ்சு போல தோசை சுடலாம்! எப்படி தெரியுமா?: மாவுக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

OruvanOruvan

Pori dosa recipe

பொரி இல்லாத ஆயுத பூஜை, விஜய தசமி கொண்டாட்டம் இருக்காது.

எல்லோருடைய வீடுகளிலும் நிறைய பொரி வாங்கி இருக்கும்.

அப்படி அதிகமா வாங்கி மீதமான பொரியில் விதவிதமான உணவுகள் செய்து சாப்பிடலாம்.

இன்று எப்படி தோசை செய்வது என்று பார்க்கலாம்.

OruvanOruvan

Pori dosa recipe

செய்முறை

பச்சரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

அதோடு வெந்தயத்தையும் சேர்த்து ஊறவையுங்கள்.

அதேபோல பொரியையும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

உளுந்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். உளுந்து இல்லாமலேயே தோசை பஞ்சு போல மெத்தென்று வரும்.

பிறகு ஊறவைத்த அரிசி, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்த அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல பொரியையும் நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் மாவுக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

காலையில் அந்த மாவைக் கலந்து தோசை வார்த்தால் தோசை பஞ்சு போல சுவையாக இருக்கும்.