வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?: வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம்.
வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல என்பதை அறிவீர்களா?
வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும்.
உணவுப்பழக்கத்தை தவிர்த்து மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.
10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது.
வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இரைப்பை உணவுக்குழாய் நோயும் வாய் துர்நாற்றத்துக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆகவே வாய்துர்நாற்றம் என்பதை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது.