’இந்துப்பு' நல்லதா... கெட்டதா?: இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு சற்று அதிகமாக உள்ளது.
இந்துப்பு அனைத்து உப்புகளையும் விட மேன்மையானதா மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததா என்பன போன்ற பல சந்தேகங்கள் நம்மிடையே உலா வருகின்றன.
இந்துப்புக்கு என்று நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. சித்த மருத்துவத்திலும் இந்த உப்புக்கு தனி இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மருத்துவ குணங்கள் இந்துப்புக்கு இருந்தாலும், அளவுக்கு மீறி இதை பயன்படுத்தக் கூடாது.
நாம் உணவில் சேர்க்கும் தூள் உப்பைவிட இந்துப்பில் சோடியம் குளோரைடின் அளவு குறைவு.
அதே போல மற்ற உப்புகளில் உள்ளதைவிட இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு சற்று அதிகமாக உள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பைக்காட்டிலும் இந்துப்பு அதிக சத்துகளை கொண்டுள்ளது.
இந்துப்பு கடைகளில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. எதை வாங்குவது என பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கும்.
வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற இந்துப்பை உபயோகிப்பதே சிறந்தது.