அடிக்கடி தேங்காய் சட்னி சாப்பிடுவது நல்லதா?: எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் சட்னி நல்லது.

OruvanOruvan

Chutney Photo Credit: TOI

சிற்றுண்டி உணவுகளுக்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னியை பலரும் விரும்புவர்.

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த தேங்காய் சட்னி வயிற்றுக்கு நன்மை தருவதோடு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நன்மை கொடுக்கும்.

தேங்காய் சட்னி சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் குறைவதுடன், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் தொற்றுக்களின் அபாயத்தை குறைக்கின்றன.

அதே நேரம் தேங்காயை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

குறிப்பாக அரிப்புகள், தேம்பல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.