சர்க்கரை நோய் முதல் இதயநோய் வரை..! அரணமாக தடுக்கும் ஆளி விதைகள்: பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் ஆளி விதை தடுக்கிறது.

OruvanOruvan

Flaxseed Photo Credit: healthline

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க சரியான ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

அப்படியொரு உணவுகளில் ஒன்றுதான் ஆளி விதைகள்.

ஆளி விதைகளில் கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்னும் சத்துக்கு முக்கிய பங்கு உள்ளது.

ஆளி விதைகளில் இருந்தும் இந்த சத்து கிடைக்கிறது.

Photo Credit: realsimplePhoto Credit: realsimple

Flaxseed Photo Credit: realsimple

பொதுவாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகும். ஆளி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், லிகனான்ஸ் ஆகிய 3 சத்துக்கள் இருப்பதால் சர்க்கரை பெருமளவில் கட்டுப்படும்

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் ஆளி விதை தடுக்கிறது, கர்ப்பப்பை செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம், அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். ஆளி விதையில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.