குப்பைமேனியின் அற்புதங்கள்: குப்பைமேனி இலைச்சாறு அல்லது சாற்றின் கஷாயம் குடல் புழுக்களை அகற்றும்.
நம்மைச் சுற்றியே வளர்ந்தாலும் நாம் கண்டுகொள்ளாமல் மறந்துவிட்ட மூலிகைச் செடிகள் பல உள்ளன.
அதில் முக்கியமான ஒன்று குப்பைமேனி...!
குப்பைமேனி சாப்பிட்டால் ஏற்படும் அற்புதங்களை பார்ப்போம்.
குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம்.
இதன் இலையை நான்கு கைப்பிடி அளவுடன் 800 மிலி நீருடன் சேர்த்து சிறுதீயில் காய்ச்சி 100 மிலி ஆக வற்றச் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கழிச்சல் ஏற்பட்டு வயிற்றில் நீண்ட நாட்களாக தங்கியுள்ள புழுக்கள் மலத்துடன் இலகுவாக வெளியேறும்.
குப்பைமேனி இலைச்சாறு அல்லது சாற்றின் கஷாயம் குடல் புழுக்களை அகற்றும். இந்த மருத்துவ பயன்பாடு ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குப்பைமேனி இலைச்சாற்றில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து கொள்ளவும். இந்த கலவையை வெளிப்புறமாக பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவினால் தோல் நோய்கள் குணமாகும்.