எடையை குறைக்கும் சுவையான நண்டுகால் ரசம்: நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு.

OruvanOruvan

Crab Rasam

உங்களுக்கு வாரந்தோறும் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை சாப்பிட்டு சலித்து போயிருக்கும்.

அப்படியெனில் இந்த வாரம் சற்று வித்தியாசமாக நண்டுக் கால் ரசம் செய்து சுவைத்துப் பாருங்கள்.

இதற்கு காரணம் நண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு.

OruvanOruvan

Crab Rasam Recipe

தேவையான பொருள்கள்

  • கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15

  • சீரகம் - 1 தேக்கரண்டி

  • சோம்பு - 1 தேக்கரண்டி

  • மிளகு - 2 தேக்கரண்டி

  • முழுப் பூண்டு - 1

  • சாம்பார் வெங்காயம் - 50 கிராம்

  • காய்ந்த மிளகாய் - 4

  • தக்காளி - 2

  • புளி - நெல்லிக்காய் அளவு

  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

  • தேங்காய்ப் பால்- 50 மில்லி

  • உப்பு - தேவையான அளவு.

தாளிக்க

கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

OruvanOruvan

Crab Rasam Recipe

செய்முறை

நண்டுக்கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி நன்றாக கழுவி கொள்ளவும்.

சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.

அதோடு வெங்காயம், தக்காளி போன்றவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.

அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.

பின்னர் பாத்திரத்தினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றவும். அதில் தேவையான உப்பை சேர்க்கவும்.

ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும்.

கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.