சாப்பிட்ட பிறகு நஞ்சாக மாறும் சில முக்கிய உணவுகள்! ஜாக்கிரதை: பச்சை மீனில் பாக்டீரியா மற்றும் சில வைரஸ்கள் இருக்கலாம்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், சாப்பிட்ட பின்னர் நஞ்சாக மாறும் (Food Poison) பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
சரியாக கழுவப்படாத காய்கறிகள்
பச்சை காய்கறிகள் சில நேரங்களில் சால்மோனெல்லா, ஈ.கோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கலாம். விளைவிக்கும் இடத்திலிருந்து நம் வீடு வரை அவை பயணிக்கும் எந்த இடத்திலும் மாசுபடலாம்.
சில நேரங்களில் அவை நம் சமையலறையில் உள்ள மற்ற பொருட்களில் படிந்துள்ள நுண்ணுயிரிகளால் மாசுபடலாம். அதனால் அவற்றை கவனமாக சுத்தம் செய்த பின்னரே உணவாக உட்கொள்ள வேண்டும்.
முட்டை
பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா இருக்கலாம். சுத்தமாகவும் உடைக்கப்படாமலும் இருக்கும் முட்டைகளில் கூட இந்த நுண்ணுயிரிகள் இருக்கலாம்.
அதனால்தான் பாஸ்ச்சுரைஸ் செய்யப்பட்ட அல்லது வேகவைத்த முட்டைகள் சிறந்தது.
பச்சை மீன்கள்
பச்சை மீனில் பாக்டீரியா மற்றும் சில வைரஸ்கள் இருக்கலாம். இவை சாதாரண நோய் மட்டுமல்லாது, மரணத்தை விளைவிக்கும் நோயை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்தவையாகக் கூட இருக்கலாம்.
அதனால்தான் மீன்களை நன்கு சுத்தம் செய்த பிறகே சமைத்து சாப்பிட வேண்டும்.
கோதுமை மாவு
நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோதுமை மாவில் மோசமான நுண்ணுயிரிகளும் இருக்கலாம். அதனால் எந்த ஒரு மாவையும் பச்சையாக சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.