நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூரியகாந்தி விதைகள்! தினமும் உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?: முக்கியமாக சூரியகாந்தி விதைகள் நோயைத் தடுக்கவும் போராடவும் உதவுகின்றன.
சூரியகாந்தி விதைகளை நம் உணவில் சேர்த்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
சூரியகாந்தி விதைகள் நோயைத் தடுக்கவும், போராடவும் உதவுகின்றன.
சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள செலினியம் வீக்கத்தையும், நோய்த்தொற்றையும் எதிர்த்துப் போராடுகின்றது.
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டும்.
சூரியகாந்தி விதைகளில் டயட்ரி நார்ச்சத்து (dietary fibre) அதிகம் காணப்படுவதால் பசி உணர்வு ஏற்படாது.
இதனால், அடிக்கடி உணவு எடுத்து கொள்வது தவிர்க்கப்பட்டு எடை குறையும்.
சூரியகாந்தி விதைகளில் காணப்படும் வைட்டமின் பி 1 (Thiamin extract) மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு தேவையான போதுமான ஆற்றலை உருவாக்கி, நாம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்ஸ் (phytosterols) உள்ளன.
இவை கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
சூரியகாந்தி விதைகளில் இருக்கும் லினோலெனிக், ஒலிக் மற்றும் பால்மிடிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சரும பொலிவு மற்றும் பராமரிப்பிற்கு உதவுகின்றன.
தோல் திசுக்களுக்கு (skin tissues) ஸ்மூத்னஸ்ஸை வழங்குகின்றன.