தலை முடி வேகமாக வளர உதவும் உணவுகள்! இனி முடி கொட்டாது: கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

OruvanOruvan

Hair growth Photo Credit: shape

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு சில முக்கிய உணவுகளும் உதவும் என்பது தெரியுமா?

வெள்ளரிக்காய் குளர்ச்சியானது என்பது அனைவரும் அறிந்ததே..! இதன் தோல் சிலிக்கான் மற்றும் சல்பர் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

முருங்கை இலைகளில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் மயிர்க்கால்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கின்றன. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றன.

பீன்ஸில் கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் எனப் பல வகைகள் உள்ளன.

இந்த பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு.

கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.