வெறும் 100 கிராம் உருளைக்கிழங்கு! இவ்வளவு நன்மைகளா?: பொட்டாசியம் வளம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

OruvanOruvan

Potato Photo Credit: GETTY IMAGES

பல வகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்களில் உருளைக்கிழங்கும் ஒன்று.

சுவையான உருளைக்கிழங்கில் மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கிறது.

சத்துக்கள் அதிகம்

நூறு கிராம் உருளைக் கிழங்கில் உள்ள சத்துக்கள்

இதில் புரதம் இரண்டு சதவீதமும் , கொழுப்பு பூஜ்ஜியம் புள்ளி ஒன்று சதவீதமும் , தாதுஉப்புகள் பூஜ்ஜியம் புள்ளி ஆறு ஒன்று சதவீதமும் உள்ளது .

நார்ச்சத்து பூஜ்யம் புள்ளி நான்கு ஒன்று சதவீதமும் ,கார்போஹைட்ரெட் வைடமின் சி பதினேழு மில்லி கிராமும் , கால்சியம் பத்து மில்லி கிராமும் , பாஸ்பரஸ் நாற்பது மில்லி கிராமும் உள்ளது. சாதாரண அளவில் ஒரு உருளைக்கிழங்கில் மூன்று புள்ளி இரண்டு கிராம் அளவு கூட புரதச்சத்து கிடைக்கிறது.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

இதில் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும்.

இந்த பொட்டாசியம் வளம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.