வெற்றிலை பாக்கு போடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுமா?: வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
விருந்துகளில் வெற்றிலை பாக்கிற்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது.
வெற்றிலையை உணவுக்கு பின் எடுத்து கொள்வது பல நன்மைகளை தருகின்றது.
வெற்றிலை மெல்லும்போது வாயில் எச்சில் அதிகம் சுரக்கிறது. இது உணவுப் பொருட்களை உடைத்து செரிமானம் செய்ய உதவும்.
மூச்சுத்திறன் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெற்றிலை மீது கடுகு எண்ணெய் சேர்த்து, லேசாக வாட்டி எடுத்து மார்பு பகுதியில் வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.
நாள் ஒன்றுக்கு ஒரு வெற்றிலையாவது நீங்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.
வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.