பப்பாளி விதைகளில் இவ்வளவு மருத்துவ பலன் இருக்கா? இனி தூக்கி போடாதீங்க!: பப்பாளி விதையில் உள்ள மூலக்கூறுகள் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

OruvanOruvan

papaya seeds Photo Credit: bebodywise

பப்பாளி பழத்தின் சுவை யாருக்கு தான் பிடிக்காது? பப்பாளி பழத்தில் மட்டுமின்றி அதன் விதைகளிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

பப்பாளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவை செரிமானத்தை ஆதரிக்கின்றன.

பப்பாளி விதை குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொன்று, மலச்சிக்கலைத் தவிர்த்து, உங்கள் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

பப்பாளி விதைகளில் உள்ள 'கரோட்டின்', ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்கும். இதனால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.

பப்பாளி விதையில் உள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பாரசைட்டுகள் மற்றும் ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

முக்கிய குறிப்பு:

பப்பாளி விதைகளை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு குறிப்பிட்ட காலம் மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும்.