கடலை பருப்பில் சுடச் சுட வடை! வெறும் அரை மணி நேரத்தில் செய்து ருசிக்கலாம்: கடலை பருப்பில் புரதம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
நம் அன்றாட சமையலில் பருப்பு முக்கிய பங்கை வகிக்கிறது.
பருப்பு வகைகள் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
கடலை பருப்பில் புரதம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதிலுள்ள கூறுகள் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
கடலை பருப்பில் பல சுவையான உணவுகள் தயாரிக்கலாம். இன்று நாம் எப்படி சுவையான வடை செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 3/4 கோப்பை
துவரம் பருப்பு - 1/4 கோப்பை
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 3
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணிநேரம் ஆன பின்னர், அதனை நன்கு கழுவி, அதில் 1/4 கோப்பை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மீதமுள்ள பருப்பை நன்கு அரைத்து, அத்துடன் வரமிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஓரளவு அரைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் வெங்காயத்தை போட்டு கிளறி, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி, தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பருப்பு வடை தயார்.