Fried rice சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?: பிரைட் ரைஸ் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால், குறைவான எண்ணெய் ஊற்றி வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

OruvanOruvan

Fried Rice Photo Credit: dirtanddough

வெஜ், சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பன்னீர் என பல வகைகளில் பிரைட் ரைஸ் தயாரிக்கப்படுகிறது.

இதை சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது இல்லை என்றும் பொதுவாகவே ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

எதுவுமே அளவோடு இருந்தால் நல்லது தான், மீறினால் சிக்கல் தான்.

பிரைட் ரைஸில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வயிற்றைப் பாதிப்பதோடு இதய நோய்க்கும் வழிவகுக்கும்.

பிரைட் ரைஸை அதிகம் சாப்பிட்டால் அதில் சேர்க்கப்படும் அதிகளவிலான உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிகப் பசியோடு இருக்கும்போது பிரைட் ரைஸ் சாப்பிட்டால், அந்த அரிசியின் மூலமாக உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்து, உடல்பருமன் வரை கொண்டுபோய் விட்டுவிடும்.

பிரைட் ரைஸுக்கு பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி, ஆட்டிறைச்சி எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது தெரியாது.

எனவே பிரைட் ரைஸ் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால், குறைவான எண்ணெய் ஊற்றி வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.