அதிகமாக இளநீர் குடித்தால் இவ்வளவு பக்க விளைவுகளா? பருகியதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும்: வைத்தியரின் ஆலோசனை இல்லாமல். சக்கரை நோயாளிகள் அடிக்கடி இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது தான் நல்லது.

OruvanOruvan

Coconut Water Side Effects

இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர்.

காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.

இளநீர் என்ன தான் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும் தினமும் அதிக அளவில் அருந்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் பற்றியும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.

இது குறித்து இன்று பார்க்கலாம்.

OruvanOruvan

Coconut Water Side Effects

இளநீரில் சர்க்கரை குறைவாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன.

அதோடு இதன் கிளைசெமிக் குறியீடும் மிக அதிகம் என்பதால் குடித்ததும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும்.

அதனால், வைத்தியரின் ஆலோசனை இல்லாமல். சக்கரை நோயாளிகள் அடிக்கடி இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது தான் நல்லது.

ஒருவேளை உங்களுக்கு நீண்ட நாட்களாக ரத்த சர்க்கரை அளவு சீராக கட்டுக்குள்ளேயே இருக்கும்பட்சத்தில் எப்போதாவது இளநீர் எடுத்துக் கொள்ளலாம்.

இளநீர் அதிக அளவு டையூரிடிக் விளைவைக் கொண்ட உணவுப் பொருள் என்பதால் அதிகமாக தேற்காயோ அல்லது இளநீரோ எடுத்துக் கொண்டால் அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்க வேண்டியிருக்கும்.

OruvanOruvan

Coconut Water Side Effects

உடலுக்கு நீர்ச்சத்தைக் இளநீர் கொடுத்தாலும் நீரிழிவு இல்லாதவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சோடியம் அளவு அதிகரித்து மூட்டு வலி, சிறுநீர்க்கடுப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும்.

அதனால் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

உடலில் வேறு ஏதேனும் அழற்சி பண்புகள் இருந்தால் அவர்களும் இளநீரை தவிர்ப்பது நல்லது.

இளநீர் உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு உடனடி சக்தியை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால், இளநீரில் கலோரிகள் மிக அதிகம் உள்ளது.

பிற பானங்களுடன் ஒப்பிடும்போது இதில் சர்க்கரை குறைவு தான் என்றாலும் இதில் கலோரகள் கூடுதலாக இருக்கின்றன.

நீரிழிவு இருப்பவர்களும் உடல் எடையை குறைக்கும் முயற்சி செய்பவர்களும் இதை தவிர்ப்பது நல்லது.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த சிக்கல் இல்லை.

ஆனால் ரத்த அழுத்தம் இயல்பான நிலையில் உள்ளவர்கள் அதிகமாக இளநீர் குடிக்கும்போது அது ரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடும்.

இதனால் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினை உண்டாகலாம்.

அதேபோல உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால் அதோடு சேர்த்து இளநீரும் குடித்தால் மேலும் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.