சுவைாயன இறால் புட்டு - வெறும் பத்தே நிமிடத்தில் செய்து அசத்தலாம்: உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறால் புட்டை விரும்பி உண்ணலாம்.

OruvanOruvan

Shrimp Puttu

உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவருக்கும் ஏற்ற இறால் புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டியும் அடங்கியுள்ளது.

ஆனால், அவற்றில் கார்போஹைட்ரேட்டு கிடையாது.

அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறால் புட்டை விரும்பி உண்ணலாம்.

OruvanOruvan

Shrimp Puttu

தேவையான பொருட்கள்

  1. இறால் - 1/4 கிலோ

  2. இஞ்சி - 1 துண்டு

  3. பூண்டு - 5 பல்

  4. பச்சைமிளகாய் - 5

  5. சின்ன வெங்காயம் - 100 கிராம்

  6. சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்

  7. மஞ்சள் தூள்- 10 கிராம்

  8. நல்லெண்ணெய் - 10 மி.லி

  9. எலுமிச்சை பழம் - 1

  10. உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு

OruvanOruvan

Shrimp Puttu

செய்முறை

இறாலை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுத்தம் செய்த இறாலை நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

OruvanOruvan

Shrimp Puttu

வெங்காயம் வதங்கியதும் அரைத்த இறாலை போட்டு கிளறவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

இறால் வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.

இப்போது சூப்பரான இறால் தயார்.