தமிழர்களுக்கு பிடித்த இட்லி வெளிநாட்டு உணவா? வியக்க வைத்த பின்னணி: 7 முதல் 12 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இடலி இன்றியமையாத உணவு
தமிழர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான காலை உணவு என்றால் அதில் முதலிடத்தில் இருப்பது இட்லி.
தமிழர்கள் ரசித்து ருசித்து சாப்பிடும் இந்த இட்லி எங்கு கண்டுப்பிடிக்கப்பட்டது.
இட்லி எப்படி தென்னிந்திய உணவாக மாறியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இட்லியின் தோற்றம்
இந்தோனேசியாவில் 7 முதல் 12ம் நூற்றாண்டில் இட்லி இன்றியமையாத உணவாக இருந்துள்ளது.
'கெட்லி' அல்லது 'கேதாரி' என்று இந்தோனேசியாவில் அழைக்கப்பட்டுள்ளது.
7 முதல் 12ம் நூற்றாண்டு வரை பல இந்து மன்னர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்தனர்.
விடுமுறை நாட்களில் அவர்கள் தங்கள் உறவினர்களைச் சந்திக்க இந்தியாவுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இந்த சமயத்தில் அரச சமையல்காரர்களையும் மன்னர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
இப்படித்தான் இந்தோனேசிய கெட்லிஸ் இந்தியாவுக்குள் வந்து இட்லியாக மாற்றப்பட்டது.
இந்திய இட்லி
இட்லி குறித்து பல்வேறு பழங்கால இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 7 ஆம் நூற்றாண்டின் கன்னடப் படைப்பான "வட்டரதனே", "இடலிகே" தயாரிப்பை விவரிக்கிறது.
10ம் நூற்றாண்டின் தமிழ் உரையான பெரிய புராணம்த்தில் இட்லி உணவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது.
சௌராஷ்ட்ரிய வணிகர்கள் தென்னிந்தியாவிற்கு இடம் பெயர்ந்து இட்லியின் செய்முறையைக் கொண்டு வந்து அதற்குப் பெயரிட்டனர்.
இட்லியின் தோற்றம் என்னவாக இருந்தாலும் இன்று பலர் விரும்பி உண்ணும் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் முதலிடத்தில் உள்ளது.
இட்லியின் நன்மைகள்
இட்லியில் உள்ள ஏராளமான நார்ச்சத்து சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
எடை இழப்புக்கு இட்லி உதவுகிறது.
இட்லியில் உளுந்து பருப்பைப் பயன்படுத்துவதால் இரும்புச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.
தினமும் இட்லி சாப்பிடுவது ஆண்களுக்கு 8 மில்லிகிராம் மற்றும் பெண்களுக்கு 18 மில்லிகிராம் இரும்புத் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதாவ ஆராச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.