இயக்குனர் அமீரிடம் கடுமையான விசாரணை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு

OruvanOruvan

Amir

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீர் நேற்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சுமார் 2 ஆயிரம் கோடி ரூபா போதைப் பொருள் கடத்தல் குறித்தான விடயம் தெடர்பில் விசாரணை இடம்பெற்றுள்ளது.

இயக்குனர் அமீரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதேவேளை அவரின் கையடக்க தொலைபேசியும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலத்தை முழுவதுமாக வீடியோ பதிவு செய்த அதிகாரிகள், அமீர் அளித்த வாக்குமூலத்தையும், ஜாபர் சாதிக் அளிக்க வாக்குமூலத்தையும் முழுவதுமாக ஒப்பிட்டு பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் இயக்குனர் அமீர் ஆஜராக வேண்டும் என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.