சடுதியாக நிறுத்தப்பட்ட நெடுஞ்சாலை கட்டண உயர்வு: தேர்தல் கால சலுகை என குற்றச்சாட்டு

OruvanOruvan

India

இந்தியாவில் நெடுஞ்சாலை கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முடிவினை மில்லியன் கணக்கான சாரதிகள்,லொறி உரிமையாளர்கள், உள்ளிட்ட வர்த்தகர்கள் வரவேற்றுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை கட்டணங்கங்கள் வருடாந்தம் அதிகரிக்கப்படுவது வழமையானது ஆனாலும் தற்போது தேர்தல் காலம் என்பதினால் அதனை அரசாங்கம் செய்யவில்லை என எதிர்தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இருந்த போதிலும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் கட்டண உயர்வு இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் முதலாம் திகதி அதிகரிப்பு ஏற்படுத்துவது வழமையானது தேர்தல் காலம் என்பதினால் அதனை செய்யமுடியாது. ஆகவே தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி எடுக்கப்பட வேண்டும். இதனை தேசிய நெடுஞ்சாலை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ளது.