நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்...: ஏலக்காய் திருடியதாக கூறி சித்ரவதை

OruvanOruvan

கடையில் ஏலக்காய் திருடியதாக கூறி பணியாளரை தாக்கி ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததோடு, நாக்கால் காலணியை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் மளிகை பொருள் விற்கும் கடை நடத்தி வருபவர் தயாலாஜிபாய் பானுஷாலி.

இவரது கடையில் தினமும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், தான் கடையில் இருந்து ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் அந்த பணியாளரின் ஆடைகளை களைந்து ஆபாசமாக பேசி திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பணியாளரை வலுக்கட்டாயப்படுத்தி கடை உரிமையாளர் தயால்ஜிபாய் பானுஷாலியின் ஷுவை(பாதணி) நக்கி சுத்தம் செய்ய வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அவர்கள் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தான் பாதிக்கப்பட்ட நபர் சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.