தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம்: ஜம்மு காஷ்மீரில் திரும்பப்பெறப்படவுள்ள சிறப்பு சட்டம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்பப்பெற ஆலோசித்து வருவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டம், பொது ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், சந்தேகப்படும் இடங்களில் தேடுதல் நடத்தவும் சந்தேக நபர்களை கைது செய்யவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதப்படை வீரர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றது.
ஆகவே காஷ்மீரிலிருந்து ஆயுத படையினரை திரும்பப்பெற்றுக்கொண்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காஷ்மீரில் எதிர்வரும் செப்டெம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதுடன் அந்த ஜனநாயகம் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.