அரவிந்த் கஜ்ரிவாலுக்கு விளக்கமறியல் நீடிப்பு: அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு

OruvanOruvan

Kejriwal

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கஜ்ரிவாலை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் போதைப் பொருள் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரவிந்த் கஜ்ரிவாலை விடுவிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்திய நிதிக்குற்றத்தடுப்பு பிரிவினர் அரவிந்த் கஜ்ரிவாலை கடந்த வாரம் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்த்தரப்பினரை ஆளும் தரப்பு அரசியல் ரீதியாக பழிவாங்கிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளுவதற்கு எதிர்க்கட்சியினர் சகலரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை டெல்லி மாநில நிதியமைச்சர் ஆதிசி (Atishi) முன்வைத்துள்ளார். எதிர்த்தரப்பினரை ஆளும் பாஜக தரப்பு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.