மியன்மார் எல்லையில் வேலி அமைக்கும் இந்தியா: சட்டவிரோத செயல்களை தடுக்க திட்டம்

OruvanOruvan

India

இந்திய-மியன்மார் எல்லையில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.அந்த வகையில் 1610 கிலோமீற்றர் தூரத்திலான பகுதிக்கு சுமார் 3.7 பில்லியன் டொலர் செலவி குறித்த வேலி அமைக்கப்படவுள்ளது.

எல்லை ஊடாக இடம்பெறும் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பாதுகாப்பு வேலி அமைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் இரு நாடுகளும் விசா இல்லை கொள்கையை கடைப்பிடித்து வந்த நிலையில் எல்லைப் பாதுகாப்பின் நிமிர்த்தம் அதனை மாற்றியக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அண்மைக்காலமாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருகின்றன.மேலும் சீன-இந்திய எல்லையில் பதட்டம் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.