பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பிராச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் திருவாரூரில் மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்களை வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இந்த விடயம் அவருக்கும் தெரியும்.
அதனால்தான், தி.மு.க. மேல் அதிகம் கோபமடைகிறார்.மாநிலம் மாநிலமாக சென்று தி.மு.க.வை விமர்சித்தார்.
இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார். இந்தியா முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்பதை கருத்திற்கொண்டு தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்.
தூக்கத்தில் இருந்து எழுந்து தி.மு.க.வை அவர் விமர்சிக்கின்றார் ஆனால் அதனை நாங்கள் கருத்திற் கொள்ளப்போவதில்லை”. என கூறியுள்ளார்.