திமுக கூட்டணி குறித்து கமல் விளக்கம்: ராகுல்காந்தி பொருத்தமானவர் என்கிறார்

OruvanOruvan

Kamal

தி.மு.க. கூட்டணியில் இணைந்தமை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

ஆளும் பாஜக மக்கள் மத்தியில் மதவாதத்தினை பரப்பி பிளவுகளை ஏற்படுத்துவதாகவும், நாட்டை ஆளுவதற்கு சிறந்த தலைமைத்துவம் என்று அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மற்றவர்களின் விமர்சனங்களை தாம் கணக்கில் எடுக்கவில்லை எனவும் மக்களின் நலன்கருதி தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கமல் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படை யில் தாம் தொகுதி பங்கீட்டைக் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை எனவும்,

இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க ராகுல்காந்தி பொருத்தமானவர் என்றும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.