உத்திரபிரதேஸில் மதரஸாவிற்கு நீதிமன்றம் தடை: முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தி

OruvanOruvan

Madrasas

இந்தியாவின் உத்திரபிரதேஸ் மாநிலத்தில் இஸ்லாமிய அறநெறிப் பாடசாலையான மதரஸாவிற்கு (madrasas) நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தடையானது முஸ்லிம் மக்களை பிரதமர் மோடியின் இந்துத்துவ அரசாங்கத்திலிருந்து மேலும் விலகிச் செய்யும் காரியம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீர்ப்பின் மூலம் 2004 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகளை நிர்வாகிப்பதற்கான சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தடைவிதிப்பானது அரசியலமைப்பினை மீறும் செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதேவேளை அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்திய மோடி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.