தேர்தலை முன்னிட்டு அதிகரிக்கும் போக்குவரத்து வசதி: தமிழக அரசு புதிய நடைமுறை

OruvanOruvan

Indian bus

தமிழகம் முழுவதும் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி முதல் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 800 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் போக்குவரத்து வசதிகளும் அதிகரிக்கப்படவுள்ளது.

குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 1000 பேருந்துகள் வீதம் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் அதிகரித்துள்ள சனநெரிசலைக் கருத்தில்கொண்டே குறித்த போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை வாக்களிப்பில் மக்களை முழுமையாக ஈடுபடவைக்கும் நோக்கில் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.