டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது: பதவியில் இருக்கும்போதே கைது

OruvanOruvan

புது டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டு மாதங்களில் 2 ஆவது மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலை இந்திய நிதிக் குற்றவியல் நிறுவனம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே வழக்கில் கெஜ்ரிவாலின் இரண்டு பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் டில்லி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட மதுக் கொள்கை, தலைநகரில் மது விற்பனை மீதான அதன் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அமலாக்கத்துறை ஒன்பது முறை கடிதம் அனுப்பியிருந்தது.

எனினும், குறித்த கடிதம் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையாகாமல் மறுத்து வந்தார்.

இது தொடர்பான வழக்கு டில்லி உயர் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, நில மோசடி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆறு மணிநேர விசாரணைக்குப் பின்னர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை. இதனால் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் இராஜினாமா செய்தார்.