இந்தியாவில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

OruvanOruvan

India

இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவடைந்துள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் மார்ச் மாதத்தின் முற்பகுதியில் இந்த நிலை அடைந்திருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிலிக்கன் வேலி (Silicon Valley) எனச் சொல்லப்படும் பெங்களூரின் பல பகுதிகளுக்கு குழாய் மூலம் நீர் வழங்கல் ஆரம்பமாகியுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 150 நீர்த்தேக்கங்கள் ஊடாக குடிநீர்,நீ்ர்பாசனம் மற்றும் நீர்மின் உற்பத்தி இடம்பெறுகின்றது.

இந்த நிலையில் குறித்த நீர்தேக்கங்கள் கடந்த வாரம் சுமார் 40 வீத நீரை எட்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்தமையினால் எதிர்வரும் மாதங்களில் மேலும் நீர் நெருக்கடி ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.