தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது: பிரதமர் மோடி அதிரடி பதிவு

OruvanOruvan

PM Modi’s ‘Surprise’ Prediction For Tamil Nadu After BJP-PMK Alliance

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று கோவையில் பிரம்மாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார். மோடியை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறது.

எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது.

“இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை" கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருப்பதால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

மேலும், இன்று பிரதமர் மோடி சேலம் கூட்டத்தில் பங்கேற்கிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு மோடி வருகிறார். அங்கு பிற்பகல் 1 மணியளவில், பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.