குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மோடி அஞ்சலி: பிரசார பேரணியில் உற்சாக வரவேற்பு

OruvanOruvan

Modi

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இன்றையதினம் தமிழகத்திற்கு சென்றுள்ளார்.

அதன்படி, மாலை கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை- மேட்டுப்பாளையம் ஈ சாய்பாபாகாலனி பகுதியில் மோடியின் தேர்தர் பிரசார பேரணி ஆரம்பமாகி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.