தேர்தல் பத்திரங்களை உடனடியாக சமர்ப்பிக்குக: இந்திய உச்சநீதிமன்றம் தேசிய வங்கிக்கு உத்தரவு

OruvanOruvan

India supreme court

தேர்தல் பத்திரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம், இந்திய தேசிய வங்கிக்கு (State Bank of India) உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு திங்களன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையானது கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய நன்கொடை தொடர்பில் பொது மக்களுக்கு அறியத்தரும் ஏற்பாடு கடந்த 2017 ஆம் கொண்டு வரப்பட்ட போதிலும் பின்னர் அது நீக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகளை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.