மக்களவைத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு: 16ஆம் திகதியுடன் முடிவடையும் பதவிக்காலம்

OruvanOruvan

General Election 2024 Dates Updates

இந்தியாவவின் 18ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதுடன், தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 19ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 10.50 இலட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும், இம்முறை நாட்டில் மொத்தாமாக 96.80 கோடி பேர் வாக்காளிள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதில், 1.82 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதில், 85 வயதைக் கடந்தவர்கள் 82 இலட்சம் என்றும், இவர்கள் வாக்களிப்பதற்காக 10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து மக்களவை தேர்தலுக்கான திகதியை அறிவிக்க இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ஏப்ரல் 19ம் திகதி ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதி வரை தோர்தல் நடைபெறவுள்ளதாகவும், ஜூன் 4ம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.