மோடி அரசாங்கத்திற்கு பாரிய நிதி நன்கொடை: தேர்தல் திணைக்களம் அதிர்ச்சி தகவல்

OruvanOruvan

Modi

இந்திய மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வர்த்தக கம்பனிகள் பாரியளவு நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தகவல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வேதா தனியார் நிறுவனம், பாரதி ஏஜர்செல் நிறுவனம்,ஏசல் சுரங்க கம்பனி ஆகியன அதிகளவில் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரியக்கிடைக்கின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் பிரகாரம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒருசில நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை பிரசார அரங்கில் பாரிய எதிரொளியை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.