மம்தா பானர்ஜி வீட்டில் வீழ்ந்து காயம்: சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

OruvanOruvan

Mamata Banerjee

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, வீட்டில் தவறி வீழ்ந்ததில் நெற்றியில் காயமைடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் நிலையில், நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் இடப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவரான மம்தா பானர்ஜி காயத்திற்குள்ளானமை கட்சியினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசார பணிகள் தீவிரமடையவுள்ள நிலையில், அவர் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கருத்து வெளியிடுகின்றனர்.

கடந்த வருடமும் மம்தா பானர்ஜி ஏற்பட்ட உபாதை காரணமாக சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.