பிரித்தானியாவுடன் இந்தியா புதிய வர்த்தக உடன்படிக்கை: தடையற்ற வர்த்தகம் குறித்து பேச்சு
இந்தியாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் புதிய வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என இரு நாட்டுத்தலைவர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்படுள்ளது.இந்தியாவில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என நம்பப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்கள் இருநாடுகள் தடையற்ற வர்த்தக நடவடிக்கைகள் குறித்தான பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றன. இருநாடுகளும் பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.
இதேவேளை இந்தியாவில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி மூன்றாவது தடைவையாகவும் பிரதமர் பதவியை வெற்றி கொள்ள எதிர்பார்த்துள்ளார்.