முஸ்லிம்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவரும் மோடி: இந்துக்களின் வாக்குகளை இலக்கு வைத்து நகர்வு

OruvanOruvan

The Citizenship Amendment Act

இந்தியா அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அமுல்படுத்த முற்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பாகுபாட்டுச் சட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை அமுல்படுத்த மோடியின் இந்துத்தத்துவ அரசாங்கம் முயன்று வருகின்றது.

பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் காய்களை நகர்த்திவரும் மோடி இந்து மக்களின் வாக்குகளை வெகுவாக கவரும் வகையில் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்து மக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதினால் ஏனைய மதங்களுக்கு பாதிப்பாக அமையும் என்பது கணிப்பாகவுள்ளது.

இந்த நகர்வு இந்துக்களை திருப்திப்படுத்தி அவர்களின் வாக்குகளால் அரியாசனம் ஏறும் கைங்கரியத்தை மோடி நாசுக்காக நகர்த்திவருகின்றார்.

மதவாத அரசியல்

இலங்கையில் சிங்கள கடும்போக்குவாத அரசியல்வாதிகள் எவ்வாறு பௌத்த மதவாதத்தினை முன்னிலைப்படுத்தி தமக்கான வாக்குகளை அறுவடை செய்கிறார்களோ அவ்வாறே இந்தியாவும் நகர்ந்துவருகின்றது.

இலங்கையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நகர்வுகள் இடம்பெறுகின்றது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரானவாதம். ஆக மதத்தினை அதாவது மக்களின் உணர்வுகளை வைத்து ஆட்சிப்பீடம் ஏறுவதே அரசியல்வாதிகளின் இலக்கு.

பொதுவாக மதங்களே ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் போக்கு மத்திய காலப்பகுதியில் பாப்பாண்டவர் ஆட்சியின் தாக்கத்தினை ஐரோப்பாவில் காணமுடியும்.

கீழைத்தேய நாடுகளில் இஸ்லாமிய ஷரியா சட்டமும், காணப்பட்டிருந்தது. இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் கண்டிய சட்டம் வலுவாகக் காணப்பட்ட போதிலும் பௌத்த மதத் தலைவர்களின் ஆதிக்கம் காணப்பட்டது. கண்டிய உடன்படிக்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்துத்துவ கொள்கை

இதேவேளை இந்தியாவினை எடுத்துக் கொண்டால் அண்மையில் இராமர் கோயில் அங்குரார்ப்பணம், தமிழகத்தில் ஈஷா மையத்தின் செயற்பாடுகள், என இந்துத்துவ கொள்கையினை மோடி வெகுவாக பரப்பி அதன் மூலம் தமது ஆட்சியினை தக்கவைத்துக் கொள்ள முயன்றுவருகின்றார்.

ஆனாலும் இலங்கையில் இந்துக்களுக்கு எதிராக பௌத்த மேலாதிக்கம் அநீதிகளை இழைக்கின்ற போதிலும் இந்துத்துவத்தின் பாதுகாவலனாகக் காட்டிக்கொள்ளும் மோடி, ஈழத்தில் உள்ள இந்துக்கள் குறித்து பெரிதாக கரிசணை காட்டவில்லை.

அண்மையில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இலங்கையின் பொலிஸார் அத்துமீறி இந்துக்களுக்கு எதிராக செயற்பட்டமைக்கு எதிராக மோடி அரசு எந்தவொரு எதிர்ப்பினையும் பதிவிடவில்லை. ஆக ஆட்சியாளர்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்கிறார்களே அன்றி மக்களின் வாழ்க்கை நெறியல்ல என்பது வெகுவாக புலப்படுகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளான பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து மத வன்முறை காரணமாக இந்துக்களைப் பெரும்பான்மையாக்க கொண்ட இந்தியாவிற்கு சீக்கியம், பௌத்தம்,கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவர்களுக்கான குடியிரிமை தொடர்பில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.