முருகனுக்கு சகல நாடுகளுக்கான கடவுச்சீட்டு கோரிய நளினி: துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

OruvanOruvan

Chennai High Court

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளை இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் மனைவி நளினி, தனது கணவரை சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு அனுமதிக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே திருச்சி மாவட்ட ஆட்சியர், சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.