மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம்: தமிழகத்திற்கு பொருந்தாது என்கிறார் மு.க.ஸ்டாலின்

OruvanOruvan

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகளை நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட - முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமை செயல்முறையை இந்த சட்டம் துரிதப்படுத்துகிறது.