மோடியின் தமிழக பயணத்தின் பின்னணி: பாஜக விஜயை வைத்து புதிய வியூகம் ?

OruvanOruvan

Modi

இந்தியாவின் அனைத்து மாநிலங்கிலும் பார்க்க தமிழகம் பொருளாதாரத்தின் மையமாக காணப்படுகின்றது. வளம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் தமிழகம் செல்வாக்குடையதாக காணப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்ஙை (Xi Jinping) தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அந்தளவு தூரத்திற்கு தமிழகம் முக்கியத்துவம் பெறுகின்றது. உலகின் மிகப் பெரிய ஒரு நாட்டின் தலைவரை தமிழகத்தில் சந்தித்தமையானது வெறுமனே அது சம்பவம் இல்லை மாறாக பாரிய அரசியல் அதற்குள் காணப்படுகின்றது.

பாஜக தமிழகத்தை வசப்படுத்தும் காரியங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

இந்துத்துவ கொள்கையின் ஊடாக தமிழக மக்களை தம் வசப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல காரியங்களை ஆற்றிவருகின்றார்.

அந்த வகையில் கோவையில் அமைந்துள்ள ஈஷா மையமும் சத்குருவும் மோடியின் பின்னணியில் உள்ளவர்கள் என்றும் அதன் ஊடாக தமிழகத்தில் கால் ஊன்றும் கைங்கரியத்தை மோடி தலைமையிலான பாஜக மேற்கொண்டுவருகின்றது என்ற கணிப்பும் உள்ளது.

இதேவேளை நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தின் பின்னிணியிலும் பாஜக இருப்பதாக கூறப்படுகின்றது. திரைத்துறையில் மிகவும் செல்வாக்குள்ளவராக நடிகர் விஜய் உள்ள நிலையில் அவர் ஊடாக தமது அரசியல் இலக்கை அடைய பாஜக முயற்சிக் கூடும். ஆனாலும் திமுக ஆட்சியுடன் மோதி வெற்றிபெறுவரா என்ற கேள்வியும் உள்ளது.

மீண்டும் தமிழகம் பயணிக்கும் மோடி

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தேர்தல் கால பிரசாரமாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்துவைத்துவரும் மோடி, தென்மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை தமிழகம், கேரளா,கர்நாடகா,தெலுங்கானா,ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு ஐந்து நாட்கள் விஜயம் செய்யவுள்ளார்.

தமிழகத்தில் சேலம், கன்னியாக்குமரி,கோவை ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்.

ஏற்கனவே கடந்த மாதம் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் ஆட்சி சிறந்தது என்றும் தற்போதைய திமுக ஆட்சி அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்ற தொனியில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் மோடியின் அரசியல் திட்டம் வெளிவரத் தொடங்கிய நிலையில் தமிழக தரப்பு அச்சமடைந்து வருகின்றது.