சென்னை-பெங்களூரு புதிய புகையிரத சேவை: பிரதமர் மோடி அங்குரார்ப்பணம்

OruvanOruvan

vantebharat

சென்னை-பெங்களூரு இடையில் மேலும் ஒரு புகையிரதத்தை சேவையில் ஈடுபடுத்த தீர்மானத்துள்ளதாக இந்திய புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் புகையிரத சேவை காணப்படுகின்றது.அந்தவகையில் பயணிகளின் நலன்கருதி மேலும் ஒரு புகையிரத்தினை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னை-பெங்களூரு இடையே உள்ள 362 கிலோமீற்றர் தூரத்தினை வந்தே பாரத் புகையிரதம் சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்களில் பயணிக்கின்றது.

அந்த வகையில் புதிய வந்தே பாரத் புகையிரத சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி பிரதமர் மோடியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.