தொழுகையில் ஈடுபடும் நபர்களை காலல் உதைத்த பொலிஸ் அதிகாரி: டெல்லி காவல்துறை அதிரடி நடவடிக்கை

OruvanOruvan

Delhi Cop Kicks, Shoves Men Offering Namaz On Road, Suspended

டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம், குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நடந்தது என்ன?

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில் வெள்ளிக்கிழமை (08) தொழுகை நடத்திக் கொண்டிருந்த ஒரு கும்பலை கலைக்க குறித்த பொலிஸ் அதிகாரி இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில், டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் பொறுப்பாளர் - ஒரு மசூதிக்கு அருகே பரபரப்பான சாலையின் ஓரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சிலரை கலைக்க முயற்சிப்பதைக் காணலாம்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர், தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் எட்டி உதைத்து தள்ளுகிறார்.

டெல்லி பொலிஸாரின் பதில்

இச் சம்பவம் குறித்து பதிலளித்த டெல்லி வடக்கு காவல்துறை துணை ஆணையாளர்,

குறித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், அவருக்கு எதிராக தேவையான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது - என்றார்.

சம்பவத்தின் பின்னணி

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குள் அமைந்திருந்த மசூதி நிரம்பியிருந்ததால், ஆண்கள் சாலையின் ஓரத்தில் தொழுது கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.