தாக்குவதற்கு முயன்றால் கடுமையாக தாக்குவோம்: இந்தியா,சீனாவிற்கு கடும் எச்சரிக்கை

OruvanOruvan

India Warning to China Kalaimathy

இந்தியாவைத் தாக்குவதற்கு முயன்றால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை போர் தொடுப்பதற்கு எல்லா காலகட்டத்திலும் தாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் தாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா பலவீனமான நாடு இல்லை என்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுக்கு தாம் நினைவுட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.