புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை: தேசிய முற்போக்கு திராவிட கழகம் புதிய குழு

OruvanOruvan

India election

இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார்.

இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேமுதிக, அதிமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுக - தேமுதிக இடையே இரண்டாம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.